வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரிப்பு. ஆசிரியர்களும், மாணவர்களும் அசௌகரியம்.
வன்னிப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகளவில்
இருப்பதாகவும் இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிப்படைந்துள்ளதாகவும் கல்வியியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகள் ஆரம்பித்ததில் இருந்து இராணுவத்தினர் தினமும் காலையில் பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்கள், மாணவர்களின் வரவு உள்ளிட்ட விபரங்களைத் திரட்டி வருவதாகவும் அடிக்கடி சீருடையிலும், சிவில் உடைகளிலும் பாடசாலைக்குள் விபரம் திரட்டுவதற்காக வருகை தருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய செயற்பாடுகளால் பல்வேறுபட்ட வேலைப்பழுக்களின் மத்தியிலும் அதிபர்களும், ஆசிரியர்களும் இவர்களுக்கு வரவுப் பதிவினை வழங்க வேண்டியுள்ளதாகவும், இவ்வரவுகள் ஏன் சேகரிக்கப்படுகின்றது எனத் தெரியாத இக்கட்டான நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனைவிட பாடசாலை மாணவர்களுடன் சிநேகமான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி வருகின்றனர்.
தற்போது பாடசாலைகளிடையில் கோட்டமட்ட, வலயமட்ட, மாவட்ட, மாகாண, தேசியமட்ட போட்டிகள் இடம்பெற்று வருவதால் இவற்றில் பங்குபற்றும் மாணவர்கள் இராணுவத்தினருடன் இணைந்து வேறு போட்டிகளிலும் ஈடுபட்டு வருவதால் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்வாறான இராணுவத்தினரின் செயற்பாடுகளால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக கல்வி யியலாளர்களும், பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர்
வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரிப்பு. ஆசிரியர்களும், மாணவர்களும் அசௌகரியம்.
Reviewed by Admin
on
September 27, 2013
Rating:

No comments:
Post a Comment