அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வங்காலையில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு.- Photos



நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 600 வரையில் மேலதிகமாக உருவாக்கும் தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தில் இன்று (புதன்) கிழமை காலை 'வங்காலை பொலிஸ் நிலையம்' வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அமைவாக நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 600 வரையில் மேலதிகமாக உருவாக்கும் தீர்மானத்திற்கு ஏற்ப மன்னார் வங்காலை கிராமத்தில் புதிய பொலிஸ் நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் டபில்யு.எப்.யு.பர்ணாந்து அவர்களின் வழி நடத்தலின் கீழ் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர அவர்களினால் இன்று (புதன்) கிழமை காலை குறித்த பொலிஸ் நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு சர்வமதத்தலைவர்கள், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ,மற்றும் வைத்தியர்கள்,உயர் அதிகாரிகள் என பலர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
















மன்னார் வங்காலையில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு.- Photos Reviewed by NEWMANNAR on March 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.