மகாராணியை செல்லப்பெயரிட்டு அழைத்த இளவரசர் ஜார்ஜ்!
பிரித்தானிய மகாராணியை குட்டி இளவரசர் ஜார்ஜ் செல்லப்பெயரிட்டு அழைத்துள்ளதாக அவரது தாயார் இளவரசி கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெருமைபொங்க தெரிவித்த இளவரசி கேட் மிடில்டன், குட்டி இளவரசர் ஜார்ஜ் தமது பெரும் பாட்டியை Gan-Gan என அழைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் மரியாதை நிமித்தம் தமது குடும்பத்துடன் மகாராணியை சந்தித்துள்ளனர்.
மகாராணி இரண்டாவது எலிசபெத் தமது 90-வது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாட இருக்கிறார். அந்த விழாவிற்காக அரச குடும்பம் தயாராகி வருகின்றது.
அந்த விழாவின் ஒரு பகுதியாக அரச குடும்பத்தினரின் சிறப்பு நேர்காணல்களை தொகுக்கப்பட்டு வருகின்றன.
அதில் பங்கேற்ற இளவரசி கேட் மிடில்டன், மகாராணியாரை சந்தித்தபோது குட்டி இளவரசர் செல்லப்பெயரிட்டு அழைத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
மகாராணியார் தங்களுக்கு சிறப்பு கவனம் அளித்துள்ளதாக கூறும் கேட் மிடில்டன், அவர் எப்போதும் ஏதேனும் ஒரு சிறு பரிசை தங்களின் அறையில் விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.
தமக்கு எப்போதும் மகாராணியார் உறுதுணையாக இருந்துள்ளதை குறிப்பிட்ட கேட் மிடில்டன், எந்த முடிவையும் தங்கள் மீது திணிக்க மகாராணி முயன்றதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மகாராணியை செல்லப்பெயரிட்டு அழைத்த இளவரசர் ஜார்ஜ்!
Reviewed by Author
on
March 21, 2016
Rating:

No comments:
Post a Comment