அண்மைய செய்திகள்

recent
-

உலகின் முதலாவது சோலார் விமான நிலையம் சேவை வழங்க தயாராகிறது,,,


கடந்த வருடம் முற்று முழுதாக சோலார் எனர்ஜியில் செயல்படக்கூடியதாக இந்தியாவின் கொச்சின் விமான நிலையம் மாற்றப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.
இந்நிலையில் தற்போது மூன்றாம் நபர்களினால் வழங்கப்படும் மின்சக்தியை தவிர்த்து முற்று முழுதாக தாமே உற்பத்தி செய்யும் சூரிய மின்சக்தி மூலம் செயற்பட குறித்த விமான நிலையம் தயாராகி வருகின்றது.

சோலார் படலங்கள் 3 வருடங்களுக்கு முன்னரே நிறுவப்பட்டிருந்த போதிலும் கடந்த வருடமே சூரிய சக்திய மூலமான மின்சக்தியின் தேவை உணரப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் 45 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த சோலார் கலங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குறித்த விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 48,000 தொடக்கம் 50,000 வரையான கிலோவாற்ஸ் மின்சக்தி தேவைப்படுகின்றது.

இதன் காரணமாக மேலும் சூரிய படலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் சூரிய படலங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் பிரதான நகரங்களாக கொல்கத்தா, கொச்சின் என்பன விளங்குகின்றன. இதனால் இப் பகுதிகளில் கார்பன் கழிவுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவடையும்.

இதேவேளை உலகில் அதிகளவு கார்பன் கழிவுகளை வெளியேற்றும் 20 நாடுகளின் நகரங்களுள் இந்தியா 13வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் முதலாவது சோலார் விமான நிலையம் சேவை வழங்க தயாராகிறது,,, Reviewed by Author on March 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.