வடக்கின் மீள்குடியேற்ற செயலணி! இணை தலைவராக ரிசாத் நியமனம்....
வடக்கின் மீள்குடியேற்ற செயலணிக்கு நான்கு இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த செயலணிக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி ரிசாத் பதியுதீன், டி எம் சுவாமிநாதன், துமிந்த திசாநாயக்க மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இந்த செயலணிக்கு இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
பிரதமரின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று ஆங்கில செய்தித்தாள் கூறுகிறது.
இந்த செயலணி, சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் தமது கவனத்தை செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கின் மீள்குடியேற்ற செயலணி! இணை தலைவராக ரிசாத் நியமனம்....
Reviewed by Author
on
July 24, 2016
Rating:

No comments:
Post a Comment