அடுத்த 24 மணி நேரம் இடியுடன் கூடிய மழை
கருமேகங்களுடனான வானமும், கன மழை பெய்தலுக்குமான நிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடருமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் மேற்கு, வடக்கு, கிழக்கு , ஊவா மாகாணங்களில் இந்தக் காலநிலை காணப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
இன்று மதியம் 2.00 மணிக்குப் பின்பு இடி முழக்கத்துடன்கூடிய பெருமழை எதிர்பார்க்கப்படுவதோடு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் பனிமூட்டம் காணப்படும். எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
மின்னலால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்க போதுமான முன்னேற்பாடுகளை எடுக்கும்படி இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரம் இடியுடன் கூடிய மழை
Reviewed by NEWMANNAR
on
November 22, 2016
Rating:

No comments:
Post a Comment