வடகொரியா மக்களின் கண்களில் இதை பார்த்தேன்... வரலாற்று சந்திப்பு குறித்து டிரம்ப் உருக்கம்
வடகொரியாவிற்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கு கிம் ஜாங் உன்னை சந்தித்த பிறகு, அங்கிருந்து தென்கொரியாவிற்கு சென்றார்.
அங்கிருக்கும் ஓஸன் விமானப் படைத் தளத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் தான் வடகொரியாவில் காலடி எடுத்து வைத்தது பற்றி கூறுகையில், அது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம்.
வடகொரியா எல்லைக்குள் நுழைந்தபோது கொரிய மக்களின் கண்களில் உண்மையில் நீர் வழிவதைக் கண்டேன். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம் என்று கூறியுள்ளார்.
மேலும் டிரம்ப் சந்திப்பு குறித்து வடகொரியாவும் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் என தெரிவித்தது.
அங்கிருக்கும் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
ராணுவம் விலக்கி கொள்ளப்பட்ட பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உன் சந்தித்துக் கொண்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம்.
அற்புதமான, ஆச்சரியமான நிகழ்வாகும். இருவரும் ஆக்கப்பூர்மான வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக் கொண்டது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் விவகாரத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
வடகொரியா மக்களின் கண்களில் இதை பார்த்தேன்... வரலாற்று சந்திப்பு குறித்து டிரம்ப் உருக்கம்
Reviewed by Author
on
July 03, 2019
Rating:

No comments:
Post a Comment