மன்னார்-மதாவச்சி பிரதான வீதியில் விபத்து-பாரிய உயிர் சேதம் ஏற்படாத வகையில் பேரூந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சாரதி-(படம்)
மன்னார்-மதவாச்சி பிரான வீதி,உயிலங்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (4) காலை 5 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் பசு ஒன்று உயிரிழந்துள்ளதோடு, சாரதியின் சாதுரியத்தினால் பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து நேற்று வியாழக்கிழமை(3) இரவு பயணிகளுடன் மன்னார் வந்த தனியார் சொகுசு பேரூந்து மதவாச்சி மன்னார் பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த சொகுசு பேரூந்து வேகமாக மன்னார் நோக்கி பயணிகளுடன் வந்து கொண்டிருந்த போது குறித்த வீதியை திடீர் என மாடுகள் கடக்கு முற்பட்டது.
எனினும் பசு ஒன்று குறித்த பேரூந்துடன் மோதியுள்ளது.இதன் போது குறித்த பசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு,குறித்த பேரூந்து கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தை தொடர்ந்து குறித்த பேரூந்தின் சாரதி உடனடியாக குறித்த பேரூந்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமையினால் பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கால் நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை உரிய முறையில் அடைத்து பராமறிக்காமையினால் இவ்வாறான பாரிய விபத்துக்கள் இடம் பெறுவதாகவும்,கால்நடைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
கொழும்பில் இருந்து நேற்று வியாழக்கிழமை(3) இரவு பயணிகளுடன் மன்னார் வந்த தனியார் சொகுசு பேரூந்து மதவாச்சி மன்னார் பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த சொகுசு பேரூந்து வேகமாக மன்னார் நோக்கி பயணிகளுடன் வந்து கொண்டிருந்த போது குறித்த வீதியை திடீர் என மாடுகள் கடக்கு முற்பட்டது.
எனினும் பசு ஒன்று குறித்த பேரூந்துடன் மோதியுள்ளது.இதன் போது குறித்த பசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு,குறித்த பேரூந்து கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தை தொடர்ந்து குறித்த பேரூந்தின் சாரதி உடனடியாக குறித்த பேரூந்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமையினால் பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கால் நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை உரிய முறையில் அடைத்து பராமறிக்காமையினால் இவ்வாறான பாரிய விபத்துக்கள் இடம் பெறுவதாகவும்,கால்நடைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

மன்னார்-மதாவச்சி பிரதான வீதியில் விபத்து-பாரிய உயிர் சேதம் ஏற்படாத வகையில் பேரூந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சாரதி-(படம்)
Reviewed by Author
on
October 04, 2019
Rating:

No comments:
Post a Comment