ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சம்பந்தனுடன் முக்கிய சந்திப்பு -
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய குறித்த குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு முதன்மை வேட்பாளர்களும் எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை தர மறுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வலியுறுத்தி மத தலைவர்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முடிவெடுத்துள்ளதுடன் அந்த சந்திப்பின் ஒரு அங்கமாகவே இன்றைய சந்திப்பு நடந்தது.
தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இன்று, இரா.சம்பந்தனை சந்திக்க தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், தமிழ் மக்கள் பேரவையை சந்திக்க தான் விரும்பவில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டு அந்த சந்திப்பை தவிர்த்து விட்டார்.
இதன்பின்னர் யாழிலுள் சிவில் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்கள், யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்கள் சிலர் இணைந்து, சிவில் சமூகமாக இந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இரா.சம்பந்தனை சந்திக்க கோரியிருந்தனர்.
திருமலை ஆயரின் மூலமாக விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டார்.
இதன் ஏற்பாட்டாளர்களாக மதத்தலைவர்கள் சென்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இதன்படி, இன்று காலை கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததுள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சம்பந்தனுடன் முக்கிய சந்திப்பு -
Reviewed by Author
on
October 04, 2019
Rating:

No comments:
Post a Comment