ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி-மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவாத்தாட்சி அலுவலகர் சி.ஏ.மோகன்ராஸ்
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும்,தேர்தல் தெரிவாத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோகன்ராஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இதியம் 12.30 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
எதிர் வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக 76 வாக்களிப்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
8 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.மாவட்டச் செயலகத்தில் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசியூடாக முறைப்பாடுகளை தெரிவிக்க விரும்புபவர்கள் 023-2223713 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.முதலில் தபால் மூல வாக்களிப்பு இடம் பெறும்.
எதிர் வரும் 31 ஆம் திகதி தாபல் மூல வாக்களிப்பு ஆரம்பமாகும்.31 ஆம் திகதி மற்றும் முதலாம் திகதிகளில் படையினருக்கான வாக்களிப்பு இடம் பெறும்.4 ஆம் 5 ஆம் திகதிகளில் மாவட்டச் செயலக,பொலிஸ் திணைக்கள மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் வாக்களிக்க முடியும்.
தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்காதவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி மன்னார் தேர்தல் திணைக்களத்தில் வாக்களிக்க முடியும்.
மன்னார் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 4 ஆயிரத்து 72 வாக்காளர்கள் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.அவற்றில் 4 ஆயிரத்து 9 பேர் தபால் மூல வாக்களிக்க ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.தாமதித்த விண்ணப்பங்கள் 35 கிடைக்கப் பெற்றுள்ளது.பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பம் 27 கிடைக்கப் பெற்றுள்ளது.தபால் மூல வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் எதிர் வரும் 16 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம் பெறும்.
வாக்கு எண்ணும் நடவடிக்கை மன்னாரில் இடம் பெறும்.தேர்தலுக்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது.தேர்தலுக்கான சகல கிளைகளும் தற்போது இயங்கி வருகின்றது.தேர்தல் ஆணைக்குழு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.
மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சகல உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.மன்னார் மாவட்டத்தில் வெற்றிகரமாக தேர்தல் இடம் பெற ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாக தேவைப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 1365 அரச அலுவலகர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
-இதே வேளை கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிட்டன்,,,
-மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் தேர்தல் முறைப்பாடுகள் 6 கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த முறைப்பாடுகள் பெரிய அளவில் இல்லை.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தீர்வுகள் காணப்படாத முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக் குழு முறைப்பாட்டு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்களிப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.ஊடகங்கள் ஊடாக தெரியப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக எங்களுடைய மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினருடன் இணைந்து வாக்காளர்களுக்கான அறிவூட்டல்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
October 29, 2019
Rating:

No comments:
Post a Comment