வௌிநாட்டு யாத்திரிகர்களுக்கு தடை விதித்த சவுதி அரேபியா.........
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், தமது நாட்டிலுள்ளவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிக்கையூடாக அறிவித்துள்ளது.
வருடாந்தம் 20 இலட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு செல்கின்ற நிலையில், வைரஸ் தொற்று காரணமாக இந்த வருடத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக ஹஜ் யாத்திரைக்கு முழுமையாக அனுமதி மறுக்கப்படலாம் என கடந்த காலங்களில் அச்சம் வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவில் 161,000 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்...

No comments:
Post a Comment