30 வருட ஆயுதப் போராட்டதிலும், அரசியல் போராட்டத்திலும் பெற முடியாதவற்றை ஒரு சில இரவுகளில் நாம் பெற்றுக் கொள்ள முடியாது
30வருட ஆயுதப் போராட்டதிலும் 30 வருட அரசியல் போராட்டத்திலும் பெற
முடியாதவற்றை ஒரு சில இரவுகளில் நாம் பெற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும்
ஒரு தூர நோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலையில் இப்போது
இருக்கின்றோம்.அந்த வகையில் இந்த தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க
வேண்டும் என்ற பாரிய கேள்வி எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.எனவே
அனைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என வடமாகாண
முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
-மன்னாரில் இன்று சனிக்கிழமை மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
எமது
அரசியல் போராட்டமானது நீண்ட தூர பயணத்தை அடிப்படையாகக் கொண்டதாக
இருக்கின்றது. இதைத்தான் வரலாறுகளும் எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. ஒரு
சில இரவுகளில் எமது உரிமைகளை அடைந்து விடுவோம் என்று எவரும் நம்ப
முடியாது.எதிர்பார்கவும் முடியாது.
இதனை இந்த
தீபாவளி அல்லது பொங்களுக்குள் பெற்று தருகின்றேன் என்று கூறுகின்ற விடயமும்
ஒரு பொறுத்தமாக அமையும் என்று நான் கருதவில்லை.
ஆனால்
அவ்வாறு அவர்கள் கூறுகின்றார்கள் என்பதற்காக ஒரு சில இரவில் அந்த
தீர்வுகள் வந்து விடும் என்று மக்களாகிய நாம் நம்புவது ஏற்றுக்கொள்ளகூடிய
ஒன்றாக இருக்கப்போவதில்லை.
எனவே எமது அரசியல் ரீதியான போராட்டம் என்பது ஒரு நீண்ட தூர பயணம் என்பதை நாம் எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
30 வருட ஆயுதப் போராட்டதிலும் 30 வருட அரசியல் போராட்டத்திலும் பெற முடியாதவற்றைஒரு சில இரவுகளில் நாம் பெற்றுக்கொள்ள முடியாது.
இருந்தாலும்
ஒரு தூர நோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலையில் இப்போது
இருக்கின்றோம்.அந்த வகையில் இந்த தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க
வேண்டும் என்ற பாரிய கேள்வி எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.
என்னை
பொறுத்த மட்டில் தற்போது எனக்கு பின்னால் இருக்கின்ற என்னுடைய மக்கள் ,
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பங்களிடம்
நான் வேண்டுகின்ற அன்பான வேண்டுகோள் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு
வாக்களியுங்கள்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பானது
தலைவரினால் உருவாக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பல அதிருப்திகள்
இருக்கின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்த விடையங்கள் பேசி
உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள்.
எல்லோறையும்
விட கூட்டமைப்பில் அதிக அதிருப்திகள் குற்றசாட்டுக்கள் எனக்கு
இருக்கின்றன.எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக தங்களுடைய இன்னுயிரை தியாகம்
செய்ய முன் வந்தவர்கள் இன்று புனர்வாழ்வு பெற்று வந்திருக்கின்றார்கள்.
இவர்களை எமது அரசியல் ரீதியான இந்த பயணத்தில் நாம் இணைத்து கொள்ளவில்லை என்பது பாரிய குறைபாடாக இருக்கின்றது.
எனவே
எமது தலைமைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிலில்
இருக்கும் பெரியவர்கள் அனைவரும் இந்த விடயத்தில் தேர்தல் முடிந்தவுடன்
உடனடியாக எமது அரசியல் ரீதியான இந்த பயணத்தில் அவர்களையும் உள் வாங்க
வேண்டும்.
அவ்வாறு செயற்படுவது எமது மக்களை
சிதராமல் ஒன்று சேர்க்கக் கூடிய சக்தியாக அமையும்.ஆகவே இதை விளங்கியவர்களாக
இம் முறை தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றினைந்து எமது தமிழ் தேசிய
கூட்டமைப்பு அதிக ஆசனங்களோடு எமது வேட்பாளர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி
வைப்போம்.
அத்துடன் கடந்த காலங்களில் நாம் விட்ட
தவறுகள் தொடர்பாக சிந்திக்க வேண்டும்.உரிமை வேறு அபிவிருத்தி வேறு.
இப்போது அதிகமானோர் தேர்தல் முடிந்த பின் குழாய்க் கிணறு அடித்து தருவதாக
தெரிவித்ததால் அவர்கள் பின் நிற்கின்றார்கள்.
பாரளுமன்ற உறுப்பினர்கள் இந்த 'கம்பெரலிய' போன்ற ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கு சென்று அரசிடம் கை நனைக்க வேண்டாம்.
அவ்வாறு நாம் அவர்களிடம் கையேந்துவோம் என்றால் கடந்த பாரளுமன்ற
உறுப்பினர்களிடம் இவ்வாறன தவறுகள் உள்ளது. மீண்டும் அவ்வாற தவறுகளை
செய்யாது இம்முறை தூரநோக்குடன் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்...
30 வருட ஆயுதப் போராட்டதிலும், அரசியல் போராட்டத்திலும் பெற முடியாதவற்றை ஒரு சில இரவுகளில் நாம் பெற்றுக் கொள்ள முடியாது
Reviewed by Author
on
July 25, 2020
Rating:

No comments:
Post a Comment