அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்கால் வளாகத்தில் தகர பந்தல் அமைக்க முல்லைத்தீவு பொலீசார் தடை!

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெறவுள்ளது அந்தவகையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு வருகைதந்த வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்பணி லியோ அடிகளார் உள்ளிட்ட பொதுமக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி நினைவேந்தல் ஏற்பாட்டு வேலைகளையும் சிரமதான பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்

 முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இனப்படுகொலைக்கு நீதிகோரி அம்பாறையில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி போரணிகள் புறப்பட்டுள்ள நிலையில். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவு நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

 இந்த நிலையில் 16.05.2022 இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பந்தல் அமைப்பதற்காக ஏற்பாட்டுக்குழுவினால் பந்தல் கொண்டுவந்து இறக்கப்பட்ட போது அதற்கு பொலீசார் தடைவித்துள்ளார்கள். பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலீசார் தகரபந்தலினை அகற்றுமாறும் காணிதொடர்பிலும் உரிய அனுமதிகளை பெற்று பந்தல் அமைக்கும் பணிகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளதை தொடர்ந்து பந்தல் அகற்றப்பட்டுள்ளதுடன் கொடிகளை கட்டி ஏனைய சிரமதான பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கையிலும் ஏற்பாட்டு குழு ஈடுபட்டுள்ளது 

-S.THAVASEELAN-




முள்ளிவாய்கால் வளாகத்தில் தகர பந்தல் அமைக்க முல்லைத்தீவு பொலீசார் தடை! Reviewed by Author on May 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.