அண்மைய செய்திகள்

recent
-

அமேசான் காட்டில் வசித்த கடைசி மனிதரும் உயிரிழந்தார்; அவரது கடைசிக் காலம் எப்படி இருந்தது?

அமேசான் காட்டில் பல ஆண்டுகளாக தனியாக வாழ்ந்த உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .பிரேசில் நாட்டில் உள்ள ரோண்டோனியா என்ற பகுதியில் உள்ள கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்குக் கொண்ட அந்த அமேசான் காட்டில் கடந்த இருபது ஆண்டுகளாகவே எந்த மனித தொடர்பும் இல்லாமல் தனியாக வசித்து வந்திருக்கிறார் அந்த பழங்குடியின மனிதர். இது சர்வைவல் இண்டர்நேஷ்னல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறிக்கை மூலம் அறிய முடிகிறது. 1980-95 ஆகிய காலக்கட்டங்களில் மனிதர்களின் தாக்குதலுக்கு ஆளான இந்த பழங்குடியின மக்களில் அனைவருமே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும், அதில் தற்போது இறந்த ஒருவர்தான் தப்பித்தார் என்றும் சர்வைவல் இண்டர்நேஷ்னல் தெரிவித்திருக்கிறது. 

வெளியாட்கள் எவருக்குமே அந்த பழங்குடி மனிதர் யார், அவர் பெயர் என்ன, அவர் பேசும் மொழி என்ன என எதுவுமே தெரியாதாம். தன்னிடம் இருக்கும் கோடாரியை கொண்டு விலங்குகளை வேட்டையாடி அதனை உண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். மேலும் ரோண்டானியாவில் உள்ள தனாரு என்ற பகுதியில் உள்ள பதுங்கு குழியில்தான் அவர் எப்போது வசித்து வருவாராம். இதனால் மானுடவியலாளர்கள் இந்த நபரை Man of the Hole என்று அழைப்பார்கள். இவர் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று 2018ஆம் ஆண்டு விழிப்புணர்வு நோக்கத்திற்காக பொதுவெளியில் வெளியிடப்பட்டிருந்தது. இதுபோக, அந்த பழங்குடியை அணுகும் நோக்கில் எவரும் முயற்சித்தால் அதற்கு இணங்காமல் பதுங்கு குழியில் இருந்து அம்புகளை தொடுத்து எதிர்ப்பு தெரிவிப்பதையே வழக்கமாக கொண்டிருந்தாராம்.

இப்படி இருக்கையில், அமேசான் காட்டில் வசித்து வந்த அந்த நபரின் உடல் நிலையை கண்காணிக்கும் பணியில் கடந்த ஆகஸ்ட் 23ஆ ம் திகதி ஃபுனாய் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவரது வசிப்பிடமாக இருந்த பதுங்கு குழியில் அந்த பழங்குடி மனிதர் சடலமாக கிடந்ததை அறிந்திருக்கிறார்கள். அவரது சடலம் இருந்த இடத்தில் வன்முறைகள் நடந்ததற்காக தடயங்கள் எதுவும் இருக்கவில்லை என்பதோடு, தனது இறப்பை அந்த மனிதர் அறிந்திருக்கக் கூடும் என்பதை உணர்த்தும் வகையில் பறவையின் இறகுகள் இருந்ததாகவும் அந்த ஃபுனாய் அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இயற்கையான முறையிலேயே அவரது மறைவு இருந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்கள். தன்னுடைய சக பழங்குடியினர்கள் கொல்லப்பட்ட பிறகு சராசரியாக 26 ஆண்டுகளாக அமேசான் காட்டில் தனியாக வசித்து வந்த கடைசி மனிதரும் இறந்து விட்டார் ர் என்பது மானுடவியல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் 1950 முதல் 1960 ஆகிய காலக்கட்டங்களில் பிறந்தவராக இருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.”


அமேசான் காட்டில் வசித்த கடைசி மனிதரும் உயிரிழந்தார்; அவரது கடைசிக் காலம் எப்படி இருந்தது? Reviewed by Author on August 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.