மன்னாரிற்கு தமிழ்ப் பொது வேட்பாளர் விஜயம்-மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மன்னாரின் பல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ள நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (2) மதியம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை யை சந்தித்து ஆசி பெற்றார்.
-இன்று திங்கட்கிழமை (2) மதியம் 1.30 மணியளவில் மன்னாரிற்கு வருகை தந்த தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மன்னார் நகரில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மங்கள வாத்தியத்துடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் ஆசி பெற்றார்.இதன் போது அருட்தந்தை நேரு அடிகளாரும் கலந்துகொண்டிருந்தார்.
நாளை வியாழக்கிழமை (3) மாலை வரை மன்னாரில் தங்கியுள்ள அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிய வருகிறது
No comments:
Post a Comment