அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேருந்து நிலையத்தில் புகைப்பிடித்தலுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம்

 மன்னார் மாவட்ட இளம் செயற்பாட்டாளர்களின் முன்னணியில், புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று (ஏப்ரல் 1) மன்னார் பொது பேருந்து நிலையத்தில் ஒரு சமூக விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



"முட்டாள்கள் தினம்" என்ற சிறப்பு நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு புகைப்பிடித்தலின் பாதிப்பு குறித்த தகவல்களை பரப்பும் நோக்கில், புகைப்பிடித்தலை மேற்கொள்பவர்களுக்கு சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்த்தப்பட்டது.


இந்நிகழ்வில் Yann அமைப்பு, Happy Voice Hub, Human Rights Activists, Human Rights First Aid Center உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.


இவ்வாறு, புகைப்பிடித்தல் போன்ற தீங்கான பழக்கவழக்கங்களை தவிர்ப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இளம் செயற்பாட்டாளர்கள் சமூகத்திற்கு வலுவான செய்தியினை பரப்பியுள்ளனர்







மன்னார் பேருந்து நிலையத்தில் புகைப்பிடித்தலுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் Reviewed by Vijithan on April 02, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.